undefined

தியேட்டரில் அமர்ந்து லேப்டாப்பில் பணிபுரிந்த ஐடி பெண் ஊழியர்! 

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் ஐடி பெண் ஊழியர் ஒருவர்  தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தார். ரெடிட் என்ற சமூக வலைதள பக்கத்தில் பணிபுரியும் ஐ.டி. பெண் ஊழியரில் ஒருவர் தியேட்டர் இருக்கையில் அமர்ந்து மடிக்கணினியில் அலுவலக வேலையை பார்த்ததாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்  பெங்களூருவில் குழப்பமான வேலை கலாச்சாரம் என தலைப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளார். 


நான் பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றேன். அப்போது முன்வரிசையில் அமைந்திருந்த ஒரு ஐ.டி.பெண் ஊழியர் மடிக்கணினியை திறந்து அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பது போல் தட்டச்சு செய்து வேலை செய்யத் தொடங்கினார் என கூறியுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூகவலைதள பயனர்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  


இது குறித்து நெட்டிசன்கள் சிலர், அந்த பெண் திறமையான நபர் இல்லை. இதனால் தியேட்டரில் படம் பார்க்கும் நேரத்திலும் வேலை பார்த்துள்ளார் எனக் கூறியுள்ளனர்.  மேலும் சிலர், படத்திற்கு முன் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என கருதி வேலையை சீக்கிரமாக முடிக்க அந்த பெண் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என ஆதரவாக கருத்துக்களை  பதிவிட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?