undefined

நவம்பர் 11 முதல் பார்வை இழந்தோருக்கான  மகளிர் டி20 உலகக் கோப்பை!  

 


 
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் புது தில்லி, பெங்களூரு மற்றும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு  இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேபாளத்தில் நிலவும் வன்முறை சூழல் காரணமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்தவும், போட்டிகளை இணைந்து நடத்தவும் இலங்கையின் கொழும்பு நகரத்தை உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து  நவம்பர் 11 முதல் நவம்பர் 25 ம் தேதி வரை, புது தில்லி, பெங்களூரு மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 21 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும்  இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தொடரை இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சமர்த்தனம் அறக்கட்டளை இணைந்து ஒருங்கிணைக்கிறது.  இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் அமெரிக்கா  நாடுகளைச் சேர்ந்த அணிகள்  கலந்து கொள்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?