செம!! இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள்!! 

 

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்க  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் எங்கேயும், எப்போதும் இலவசமாக பயணம் செய்ய முடியும்.  அதே நேரத்தில் வெளியூர் பேருந்துகளில் பயணம் செய்ய எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. தனியார் பேருந்துகளை பொறுத்தவரை வெளியூர்களுக்கு பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து  அரசு பல முறை எச்சரிக்கை விடுத்தும் கட்டணம் குறைக்கப்படவில்லை.

அதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் திருவிழா, தொடர் விடுமுறை சமயங்களில் அல்லோல்லகப்பட்டு வருகின்றனர். அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை  என்னதான் கட்டணம் குறைவாக இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில் பெரும் சவால் இருந்து வருகிறது.  மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அவர்களின் வசதியின் அடிப்படையிலும் அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்த  நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு விரைவு பேருந்துகளில்  முன்பதிவு செய்ய இருக்கும் பெண்கள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி மூலம்  முன்பதிவு செய்து கொள்ளலாம்.இதில் பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் தனித்துவமாக  குறிப்பிட்டு இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!