undefined

 ஏற்றுமதி நிறுவன குடோனில் மூட்டை சரிந்து தொழிலாளி பலி... நிவாரணம் கோரி உறவினர்கள் போராட்டம்!

 
 

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் குடோனில் மூடை சரிந்து விழுந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க போராட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா, இளவேலங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் என்ற கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குடோனில் பணியில் இருந்தபோது, மூடை சரிந்து விழுந்ததில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் கண்ணனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இளவேலங்கால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் டிபி வேர்ல்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரவீந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பாதுரை, மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிபிஐஎம் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமோன்ராஜ், மற்றும் அவரது குடும்பத்தார்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கண்ணன் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க ஏற்றுமதி நிறுவனம் உறுதி அளித்ததது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?