உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்... இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமருக்கு வெள்ளி பதக்கம்!

 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் அவர் 466.9 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். சீனாவின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸைச் சேர்ந்த ரோமெய்ன் ஆஃப்ரெர் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் 24 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 597-40x புள்ளிகளைப் பெற்று உலகச் சாதனையை சமன் செய்திருந்தார். இவரது துல்லியமான சுடுதல் திறமைக்கு சர்வதேச அளவில் பாராட்டு குவிந்துள்ளது.

இந்த வெற்றியால் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணிக்கு உலக அரங்கில் மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!