undefined

ஆடி வெள்ளியன்று குலதெய்வ வழிபாடு... இதை செய்ய மறக்காதீங்க!

 

நாளை ஆடி மாத வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் உங்களது குலதெய்வ வழிபாட்டை மறக்காதீங்க. எல்லா காரியங்களிலும் உங்கள் குலதெய்வம் தான் உங்களையும், உங்கள் சந்ததியினரையும் காத்து நிற்கிறது. 

உங்கள் குலம் சிறக்க மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை இந்த மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் செய்யுங்க. ஆடி வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்தால் வேண்டிய வரம் பெறலாம் என்பது ஐதீகம். வருடத்திற்கு ஒரு முறையாவது அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். பலரும் ஆடி மாதத்தில், குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். 

இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைத்தால் மட்டுமே வேண்டியது கிட்டும் என்கின்றன நமது சாஸ்திரங்கள். இதனால் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். குலதெய்வம் கோவில் வேறு ஊரில் இருக்கிறது, நினைத்தவுடன் சென்று வர முடியாது, அல்லது சமீபத்தில் தான் குலதெய்வ வழிபாடு நிறைவடைந்தது என்பவர்கள் வீட்டிலேயே ஆடி வெள்ளியில்  குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம் .

குலதெய்வத்தை  வழிபடும் முறை:

முதல்நாளே  வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சந்தனம் குங்குமம் பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். குலதெய்வத்தின் புகைப்படத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து பூக்களை சாற்றலாம். 

புகைப்படம் இல்லாதவர்கள்  குலதெய்வத்திற்காக தனியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபடலாம்.குல தெய்வ திருவிளக்கில் நெய் விளக்கு ஏற்றலாம்.  குலதெய்வத்திற்கு  சர்க்கரை பொங்கலை படைப்பது மிக மிக விசேஷம். சர்க்கரை பொங்கல், வெற்றிலைப் பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே கூட போதுமானது.அத்துடன் கொழுக்கட்டை, சுண்டல், பாயசம் என்று இதர உணவுகளையும் செய்து பிரசாதமாக வைக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடித்து விட வேண்டியது அவசியம். 

பூ, பழம், வெற்றிலைபாக்கு, நைவேத்தியம் உட்பட அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்த பின்பு, அம்மன் பாடல்கள் அல்லது பாசுரங்களை பாராயணம் செய்யலாம். உங்கள் குலதெய்வத்துக்குரிய ஸ்லோகங்களை பாடலாம். குலதெய்வத்துக்கான ஸ்லோகம் தெரியாதாவர்கள் அபிராமி அந்தாதி பாடலாம்.  கற்பூரம், தீபாராதனை செய்து, வேண்டுதல்களை செலுத்தி, ஒரு ரூபாய் மஞ்சள் துணியில் முடிக்கலாம். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது, அந்த ரூபாயை செலுத்தி விட வேண்டும்.வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிரசாதங்களை விநியோகம் செய்யலாம்.

காலை மாலை இரண்டு வேலையும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.  ஆடி வெள்ளியில் அம்பிகையை அலங்கரித்து பூஜித்து வழிபட்டு வர வாழ்வில் எல்லா வளங்களும் வந்து சேரும். குடும்பம் முன்னேற்றம் அடையும், மாங்கல்ய பலம் கூடும்.ஆடிவெள்ளியில் அம்பிகையை வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?