உஷார்... 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்!
தமிழ்நாட்டில் மீண்டும் மழை தாக்கம் அதிகரிக்கவுள்ளது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நவம்பர் 13, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்தது. காசிமேடு, பாரிமுனை, மெரினா பீச், மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் இடைவிடாது மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும், ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மாறுபாட்டை கருத்தில் கொண்டு, மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியில் செல்லும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க