இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம்... சனி - சுக்கிரன் சேர்க்கையால் கொட்டப்போகுது பணமழை!
இந்த 3 ராசிக்காரர்களுக்கு சனி - சுக்கிரன் சேர்க்கையால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழப் போகிறது. பொருளாதாரம், உறவுகளில் மேன்மை என்று இதுநாள் வரையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகி வாழ்க்கையில் ஏற்ற பெறுவீர்கள்.
நவம்பர் 17ம் தேதி வியத்தகு கிரகச் சுழற்சி நிகழ உள்ளது. சூரியன் விருச்சிகத்தில் பிரவேசிக்கும் நேரத்தில், அதே ராசியில் சுக்கிரன்–செவ்வாய் இணைவு உருவாகிறது. இதனுடன், சூரியன்–சனி கூட்டணி ஏற்படும் நிலையில் ‘நவபஞ்சம யோகம்’ எனப்படும் அரிய ஜோதிட நிலை உருவாக உள்ளது.
ஜோதிடர்கள் கூறுவதில், சூரியன்–சனி பாரம்பரியமாக பகைமை உறவில் காணப்படும் காரணத்தால், இந்த பெயர்ச்சி பலரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகுந்த நன்மைகளை தரும் என பார்க்கப்படுகிறது.
சுக்கிரன் பிரதானமாக காதல், செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் நிலையில், இந்த பெயர்ச்சி அதிர்ஷ்ட வாசலைத் திறக்கப் போகிறது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீனம்: கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்வதால் மீன ராசிக்காரர்களுக்கு தொலைதூர லாபங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. திடீர் பணவரவு கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உருவாகும். காதல்–திருமண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப தகராறுகள் தீர்ந்து சமாதானம் நிலவும். பணியிடத்தில் பாராட்டு, பொறுப்பு கூடும். எடுத்த முயற்சிகள் பலனளிக்கும் காலம் இது.
விருச்சிகம்: சுக்கிரன் விருச்சிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் வியாபாரம்–நிதியில் உயர்வுகள் நிகழும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் உயரும். குடும்ப சூழல் மகிழ்ச்சியுடன் அமையும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு வாய்ப்பு.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு மன அமைதியும், பொருளாதார முன்னேற்றமும் காணப்படும். வணிகத்தில் எதிர்பாராத பெரிய வெற்றி வரும். முதலீட்டில் லாபம். வீட்டு வசதிகளில் புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பு இருக்கும். குடும்பத்தில் சமரசம், தம்பதி வாழ்வில் மகிழ்ச்சி. வேலை தேடுபவர்கள் தகுதியான வாய்ப்பு பெறலாம். “30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இந்த சனி–சுக்கிரன் நிலை, ஒழுக்கமும், ஓயாமல் உழைக்கும் நபர்களுக்கு பயனளிக்கும். மற்ற ராசிக்காரர்கள் அமைதியாக செயல்பட்டு, அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க