undefined

 பள்ளி மாணவிகள், சினிமா ஆசையால் சென்னை வரும் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில்... சென்னையில்  அடுத்தடுத்த அதிர்ச்சி!

 

 சென்னையில் வளசரவாக்கத்தில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம்  நடத்தப்படுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பெயரில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்  அங்கு 17 வயது சிறுமி,  உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்  இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த  விசாரணையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும்  பிரபல விபச்சார பெண் தரகர் நதியா தான்   அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாக முதியவர் கூறினார். அதற்காக அவர் ரூ25000 கொடுத்ததாகவும் கூறினார். இதன் பேரில்  நதியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகின. அதில் நதியா தோழியோடு இணைந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். சமூக வலைதளங்கள் செல்போன் செயலிகள் மூலமாக இந்த தொழிலை விரிவுபடுத்தி உள்ளார்.  சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்த இளம்பெண்களையும் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வந்த பெண்களையும் ஆசை வார்த்தை கூறி இந்த தொழிலில் தள்ளிவதே இவர்களின் வேலை.

இந்த பணியில் அவ்வப்போது சிக்கும் சிறுமிகளையும் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த விசாரணையின் பேரில்  இந்த விபச்சார கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியை விபச்சார தொழிலில் தள்ளிய நதியா உட்பட அந்த கும்பல் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!