undefined

அடகு வைத்த காதலி நகையை மீட்க இளைஞர் செய்த செயல்.. ஏ.டி.எம்மில் திருட முயற்சித்த பகீர் சம்பவம்!

 

காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சிலர் தவறாகச் சென்று தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் இயங்கி வரும் ஏடிஎம்மில் இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, ​​அபாய சத்தம் கேட்டதால், அந்த வாலிபர் அங்கிருந்து ஓடினார்.

கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அனுப்பப்பட்டதை அடுத்து, போலீசார் 150-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் பிறகு அப்ராம் என்ற இளைஞர் குற்றத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. பின்னர் பதுங்கி இருந்த இவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், காதலியின் நகைகளை அடகு வைத்திருந்ததாகவு, அதனை உடனடியாக திருப்பி தர பணம் தேவைப்பட்டதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!