undefined

 இளம்பெண் தற்கொலை... மாஜி அமைச்சரின் உறவினர் வெட்டிக் கொலை!

 
 

சிவகங்கை மாவட்டத்தில், காதல் பிரச்னையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், இதில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை அருகே தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் மனோஜ்பிரபு(29). தற்போது சிவகங்கை, காமராஜர் காலனியில் வசித்து வரும் இவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் ஹரிகரன், அஜித்குமார் ஆகியோருடன் இடையமேலூர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு டூவீலரில் சக்கந்திக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல், இவரது பைக் மீது மோதி அவரை கீழே தள்ளியது. பின்னர் தப்பியோடிய மனோஜ்பிரபுவை விரட்டிச் சென்று ஓட ஓட சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்த தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார், மனோஜ்பிரபுவின் உடலை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக தமறாக்கியை (தெற்கு) சேர்ந்த அபிமன்யு, பூச்சிபிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் மற்றும் பெயர் தெரியாக 4 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “மனோஜ்பிரபுவின் தங்கை புவனேஸ்வரியை அபிமன்யு காதலித்து வந்தார். ஆனால், புவனேஸ்வரிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடந்த நிலையில் அபிமன்யு, காதலிக்கும் போது எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் இருந்து இருதரப்பிற்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்கனவே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மனோஜ்பிரபு கொலை நடந்துள்ளது” என்றனர். இரு தரப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?