undefined

கத்தார் மேலயா கை வைக்கிறீங்க... இஸ்ரேல சும்மா விட முடியாது...   கை கோர்த்த அரபு நாடுகள்!

 


இஸ்ரேல் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் சுமார் 60000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ்க்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரபு நாடுகள் அமைப்பு ஒன்று கூடி இஸ்ரேலுக்கு எதிரான முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 


சமீபத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அரபு நாடுகள் கூட்டமைப்புக்கு கத்தார் அழைப்பு விடுத்தது. இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கத்தார் மன்னர், சவுதி இளவரசர், ஈரான் அதிபர், ஈராக் பிரதமர், பாலஸ்தீன அதிபர் என பல அரபு, இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்பு நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.  எதிர்காலத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கவும் இந்த கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?