25 வயசு தான்... அருவியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் உயிரிழப்பு... நண்பர்களுடன் குளித்த போது விபரீதம்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் 25 வயது ஷ்ரவன். இவர் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கர்நாடகா சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு பாறை மீது ஏறி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார்.
தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட அவரை அங்கிருந்தவர் உடனடியாக மீட்டனர். குளித்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!