இளைஞர் தலையில் கல்லை போட்டு படுகொலை... பேருந்து நிலையம் அருகே பயங்கரம்!
ஈரோடு மாவட்டத்தில் முன்புறம் சத்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே உள்ள சாக்கடையில் இளைஞர் ஒருவர் ரத்தக்காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து, சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் . இவருக்கு வயது 40. அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்து பேருந்து நிலையத்துக்கு ஓடி வருவதும் போவதுமாக பதிவாகியுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் சுகீர்த்தன் (21), முகேஷ் (22),செல்வராஜ் ஆகிய 3 பேரை ஈரோடு டவுன் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மது போதையில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதாக அதிர்ச்சி தரும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!