undefined

Zomato வில்  பன்னீர் ஆர்டருக்கு  வந்த   சிக்கன்... கதறும் வாடிக்கையாளர்!

 

 புனேவில் உள்ள ஒரு நபர் சமீபத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் நகரத்தில் உள்ள ஒரு முக்கிய உணவகத்தில் உணவை ஆர்டர் செய்தார். ஆனால் வந்த ஆர்டரை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இவர் ஆன்லைனில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்த உணவை திறந்து பார்த்தால், உள்ளே சிக்கன் பீஸ் இருந்தது தெரிந்தது. ஆர்டர் செய்துது ஒன்று, டெலிவரி செய்துது வேறு.

நான் சைவ உணவு உண்பவன், வெஜ் ஆர்டர் செய்தேன். ஆனால் அதில் சிக்கன் துண்டுகள் கிடைத்தன. தற்போது பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் சைவ உணவு உண்பவன் என்பதால் இது எனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் கூறினார். யாஷ் கேட் பதிவிற்கு Zomato பதிலளித்துள்ளது. இந்த சம்பவத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் உணவை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இவ்விஷயத்தில் நாங்கள் உங்களை அவமதிக்க விரும்பவில்லை. எங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.

நீங்கள் செய்த ஆர்டரின் ஐடியைப் பகிரவும். இதன் மூலம் சிக்கலை தீர்க்க முடியும். உணவக கூட்டாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும் என்று Zomato பதிலளித்துள்ளது.  இதேபோல், வாரணாசியில் ஒரு நபர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தார். ஆனால் அங்கும் பன்னீர் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!