தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு... சுதந்திர தின விழாவில் இதற்குத் தடை!
நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியாவில் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசிய கொடி ஏற்றி விழாவை சிறப்பிக்க வேண்டும். மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.
சுதந்திர திருநாளில் பிளாஸ்டிக் வகை தேசிய கொடிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதே போல் தேசிய கொடியை தலைகீழாகவோ அல்லது கிழிந்த கொடிகளையோ ஏற்றக் கூடாது. இது சார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தலகளை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!