பரபரப்பு... பாமக மூத்த தலைவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… !
பாமக கட்சியின் மூத்த தலைவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் கூட. இவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருந்தபோதிலும் அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் கதவு சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ம.க. ஸ்டாலின் ராமதாஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தற்போது பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!