‘லியோ’ பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... நடிகர் ரஜினி வாழ்த்து!

 
ரஜினி

’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடையே பேசும் போது தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

ரஜினி 170

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புவதற்காக இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அப்போது அங்கு செய்தித்தாளர்களை சந்தித்த போது, ‘’புவனா ஒரு கேள்விகுறி என்ற திரைப்படத்திற்கு பின் 40 ஆண்டு காலம் கழித்து தற்போது படப்பிடிப்பிற்காக நான் தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.

லியோ

தென் மாவட்ட மக்கள் மிகவும் அன்பான மக்கள், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் புகைப்படம் எடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது. லியோ படம் மிக பெரிய வெற்றி அடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்கிற சர்ச்சை கிளம்ப்யிருந்ததும், அதற்கு ‘ஜெயிலர்’ பட விழாவில் ரஜினி குட்டிக் கதை சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!

From around the web