ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !

 
பயங்கரவாதிகள்
 

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை இரவு, குப்வாரா எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவத்தினர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தலிபான் பயங்கரவாதிகள்

இதற்கு பதிலடி அளித்த ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் ராணுவம் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!