2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது!

 
காமன்வெல்த்
 

 

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் அண்மையில் ஆமதாபாத்தில் ஆய்வு நடத்தி, உலக தரத்திற்குரிய மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களை பரிசீலித்துள்ளனர்.

72 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியை இந்தியா நடத்துவதற்கான வாய்ப்பு காமன்வெல்த் கூட்டமைப்பால் ஒப்புதல் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை நவம்பர் 26ம் தேதி கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் பொதுக்கூட்டத்தில் வெளியிடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்ததன்படி, “இந்தியாவிற்கு இது பெருமைக்குரிய நாள். பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் உலக விளையாட்டு தளமாக மாறும் முயற்சிகள் காமன்வெல்த் சங்கத்தின் அங்கீகாரத்தைக் பெற்றுள்ளது” என்றார்.

ஆமதாபாத்தில் கடந்த 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த நரேந்திர மோடி மைதானம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட மையங்கள் அமைந்துள்ளதால், போட்டி நடத்த நகரின் வசதிகள் உலக தரத்திற்கு இணங்க உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?