24 திருநங்கைகள் கூட்டாக தற்கொலை முயற்சி... பெரும் பரபரப்பு!

 
திருநங்கைகள் திருநங்கைகள்
 

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர்—நந்தல்புரா பகுதியில் 24 திருநங்கைகள் நேற்று (அக். 15) இரவு வீட்டில் உபயோகிக்கும் ஃபினாயிலை குடித்து ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநங்கைகள்

மருத்துவமனையின் தகவலின் படி, 22 பேரது உடல்நிலை சீரானதாக உள்ளது. இருப்பினும், இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநங்கைகள்

சம்பவத்தை விசாரிக்கும் காவல் துறையினர், திருநங்கைகள் குழுவின் தலைவரான சப்னா என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ராஜா ஹாஷ்மியை தேடி வருகின்றனர். இந்தூர் திருநங்கைகள் சமூகத்தில் மோதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக 24 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பிறகு, முழுமையான காரணங்கள் தெரியவிரும்பும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?