குஜராத்தில் ஜடேஜா மனைவி உட்பட 26 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, முந்தைய அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்த நிலையில், புதிய 26 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவை, காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக்கொண்டது.
இந்த அமைச்சரவையில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு, புதிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்ஷ் சங்கவி, கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

முந்தைய அரசில் நிதி அமைச்சராக இருந்த கனுபாய் தேசாய் புதிய அமைச்சரவையிலும் retained செய்யப்பட்டார். மாநிலத்தில் முக்கிய வாக்கு வங்கியாக விளங்கும் பட்டேல் சமூகத்தினருக்கு 6 தலைவர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினப் பகுதிகளில் கட்சியை வலுப்படுத்த 4 தலைவர்கள், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 3 பேர், சத்திரியர் சமூகத்திலிருந்து 1, பிராமணர் சமூகத்திலிருந்து 1, மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்த பாஜக கொள்கையின் படி 3 பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
