திருமணத்திற்கு மறுத்த தோழி... இன்ஸ்டாவில் ஆபாச புகைப்படங்களை

 
இன்ஸ்டா

இன்ஸ்டாகிராமில் மூலமாக அறிமுகமாகி, தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த தோழி, வேறு மதம் என்பதைக் காரணமாக கூறி திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில், அதே இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கை உருவாக்கி,  20 வயது இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை டெல்லி காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். 

என்சிஆர்பி போர்ட்டல் மூலம் சைபர் வடக்கு காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினார். 2018 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரு நபரை சந்தித்து அவருடன் அரட்டை அடித்ததாகவும், ஆனால் காலப்போக்கில், அந்த நபர் தன்னை துன்புறுத்தவும், கலப்பு திருமணத்திற்கு வற்புறுத்துவதாகவும் தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

Delhi Man Arrested For Creating Fake Instagram Account Of Ex-Girlfriend

"பாதிக்கப்பட்டவர் அவருடன் பேசுவதை நிறுத்தியபோது, ​​​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரது படத்தைப் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு சுயவிவரங்களை உருவாக்கினார். அவர் ஆபாசமான கருத்துகளுடன் சில அநாகரிகமான விஷயங்களைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது மொபைல் எண்ணையும் அந்த சுயவிவரங்களில் பகிர்ந்துள்ளார், அதனால் அவர் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டார், ”என்று துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) மனோஜ் குமார் மீனா கூறினார்.

Delhi Police arrest man for creating fake Insta account of woman, sharing obscene  posts | Headlines

குற்றம் சாட்டப்பட்ட கோபால் கரலியா, திங்கள்கிழமை புனேயில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், கரலியா அந்த பெண்ணுடன் 2018 இல் தொடர்பு கொண்டு அவளுடன் நட்பு கொண்டதை வெளிப்படுத்தினார். அவர் அவளிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டுள்ளார், ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அது நிறைவேறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web