மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்!
கர்நாடகா மாநிலம், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவர் டிப்-டாப் உடையில் பயணி போல் புகுந்து, ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளிடம் யாசம் கேட்டுக் கொண்டிருந்த சம்பவம் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நபர் ‘நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. எனக்கு உதவி செய்யுங்கள்’ என கூறி பயணிகளிடம் துண்டு சீட்டை வழங்கி யாசம் பெற்றார். இந்த நிகழ்வை மெட்ரோ ரெயிலில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் சம்பவம் குறித்து அறிந்து, அந்த நபரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
