பிரபல நடிகை மதுமதி காலமானார் ... திரையுலகினர் இரங்கல்!
இந்தி திரையுலகின் மூத்த நடிகையும் பிரபல நடனக் கலைஞருமான மதுமதி (87) நேற்றிரவு காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று மும்பையில் காலமானார்.1950 மற்றும் 1960களில் “அங்கேன்”, “முஜ்ஹே ஜீனே தோ”, “டவர் ஹவுஸ்”, “சிகாரி” போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்த மதுமதி, அந்தக் காலகட்டத்தில் சிறந்த நடனக் கலைஞராகவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். ஹெலன் உள்ளிட்ட புகழ்பெற்ற நடன நட்சத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டவர்.
My first and forever guru. Everything I know about dance, I learnt at your feet, Madhumati ji. Har ada, har expression mein aapki yaad hamesha saath rahegi. Om Shanti 🙏 pic.twitter.com/Vo288LSMRZ
— Akshay Kumar (@akshaykumar) October 15, 2025
மதுமதி மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனது முதல் மற்றும் என்றும் நினைவில் நிற்கும் குரு மதுமதி ஜி. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு நடன அசைவையும் உங்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். உங்கள் நினைவுகள் எப்போதும் என்னோடு இருக்கும். ஓம் சாந்தி” என பதிவு செய்துள்ளார்.
Rest in peace our teacher and guide #Madhumati ji. A beautiful life led filled with love and blessings from so many of us who learnt dancing from this legend 🙏🏻 pic.twitter.com/eRRZ3W1LOx
— Vindu Dara Singh (@RealVinduSingh) October 15, 2025
அதேபோல் நடிகர் விந்து தாரா சிங் தனது இரங்கல் செய்தியில், “எங்கள் ஆசானும் வழிகாட்டியும் ஆன மதுமதி ஜி அமைதியடையட்டும். அன்பும் ஆசீர்வாதமும் நிறைந்த அழகான வாழ்க்கையை வாழ்ந்த இந்த மகத்தான நடன நாயகிக்கு எங்களின் மரியாதை” என குறிப்பிட்டுள்ளார்.மதுமதி மறைவால் இந்திய திரையுலகில் ஒரு சிறப்பான காலத்தின் முடிவாக ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
