உஷார்... மார்ச் மாதத்தில் 18 நாட்கள் வங்கி விடுமுறை... பண பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கோங்க!

 
டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

வரும் மார்ச் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாநிலத்தில் உள்ளூர் விடுமுறை தினங்களுக்கேற்ப என்றென்று விடுமுறை என தெரிந்து கொண்டு பணபரிவர்த்தனைகளை திட்டமிட்டுகோங்க. இந்தியா முழுவதும்  பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகள் செயல்படும் நாட்கள்,விடுமுறை தினங்கள்  ஆகியவை பொதுவிடுமுறைகள் தவிர்த்து உள்ளூர் விழாகள் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நிலையில்  பணப்பரிவர்த்தனை மாதாந்திர தேவைகள் இவைகளுக்காக வாடிக்கையாளர்கள்  வங்கிகளையே நாடவேண்டியுள்ளது.  

வங்கி விடுமுறை

தேசிய விடுமுறைகள், பண்டிகைகளை தவிர்த்து வார இறுதி நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்திற்கான வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி மார்ச் 2024ம் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை RBI  வெளியிட்டுள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப விடுமுறை நாட்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.  அதிகாரப்பூர்வ பட்டியலின் படி மார்ச் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2024க்கான  வங்கி விடுமுறை பட்டியல்: 

மார்ச்  01 -வெள்ளிக்கிழமை  - சாப்ச்சூர் குட் மிசோரம்
மார்ச் 03 - ஞாயிற்றுக்கிழமை- வார விடுமுறை  
மார்ச்  06- புதன் -மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி  
மார்ச் 08,- வெள்ளி - மகா சிவராத்திரி 
மார்ச் 09 - சனிக்கிழமை  இரண்டாவது  சனிக்கிழமை
மார்ச் 10 - ஞாயிற்றுக்கிழமை 
மார்ச் 12- செவ்வாய் ரமலான் ஆரம்பம் 

வங்கி
 மார்ச் 17- ஞாயிற்றுக்கிழமை  
 மார்ச் 20- புதன் கிழமை  உத்தராயண அனுசரிப்பு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்
மார்ச் 22 -  வெள்ளி பீகார் நாள் பீகார் மாநிலத்தில் மட்டும் விடுமுறை
மார்ச் 23-  சனிக்கிழமை பகத்சிங் தியாகி தினம் சில மாநிலங்களில் விடுமுறை
மார்ச்  24- ஞாயிற்றுக்கிழமை  
மார்ச் 25 - திங்கட்கிழமை ஹோலி 
மார்ச் 26 -செவ்வாய் கிழமை  யாசங் மணிப்பூர்
மார்ச் 28- வியாழக்கிழமை - மாண்டி வியாழன் அனுசரிப்பு தடைசெய்யப்பட்ட விடுப்பு
மார்ச் 29- வெள்ளி க்கிழமை - புனித வெள்ளி  
மார்ச் 30- சனிக்கிழமை -நான்காவது சனிக்கிழமை  
31 மார்ச் 31- ஞாயிற்றுக்கிழமை -ஈஸ்டர் தினம் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web