பீகார் தேர்தல்... முதல்வர் நிதிஷ்குமார் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்கட்டமாக 57 வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ளார். 234 தொகுதிகளைக் கொண்ட பிகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 101 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட திட்டமிட்டுள்ளது. புதிய பட்டியலில் சாதி அடிப்படையும், வெற்றி வாய்ப்பு கொண்ட பகுதிகளும் கவனத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடும் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். பின்தங்கிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஐந்து தொகுதிகளில் நேர்முக போட்டி நடத்த உள்ளனர்.

முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்த பட்டியலில் சிறைக்குச் சென்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆலெளலி, சோன்பார்சா, ராஜ்கிர், ஏக்மா மற்றும் மோர்வா போன்ற தொகுதிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இது பிகார் தேர்தல் போட்டியை மேலும் பரபரப்பாக மாற்றுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
