துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் !
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் செய்தியில், அவரது மயிலாப்பூர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஆனால் சி.பி. ராதாகிருஷ்ணன் ஓராண்டுக்கு முன்பே அந்த இல்லத்தை காலி செய்து, தற்போது போயஸ் கார்டனில் வசித்து வருகிறார் எனத் தெரியவந்தது.

மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலின் மூலத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
