தலைநகர் டெல்லி உட்பட 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை... பெரும் பரபரப்பு!
வங்கி மோசடி தொடர்பாக தில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடி சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமீப மாதங்களாக சைபர் மோசடி மற்றும் வங்கி மோசடி குறித்த பல புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.இன்று நடைபெற்ற சோதனைகள், ஒரு குறிப்பிட்ட நபர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரின் வளாகங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தனது தகவல் அறிக்கையையும் பதிவு செய்தது.

அதில், ஒரு தனிநபரும் அவரது குடும்பத்தினரும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியிடமிருந்து பெற்ற சுமார் ரூ.70 கோடி கடன் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிதி, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடாத நிறுவனங்களுக்கு மாற்றி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,700 கோடி மதிப்புள்ள தனித்தனி வங்கி மோசடி வழக்கில், மேற்குவங்கம், தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.அந்த சோதனைகள் கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றன. நகை நிறுவனங்களுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் நிதி முறைகேடு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
