மக்களே உஷார்... சந்தையில் போலி ENO விற்பனை.... எப்படி கண்டறிவது? அதிர்ச்சி ரிப்போர்ட்!

 
eno

 

மக்கள் பரவலாக பயன்படுத்தும் ENO போன்ற அமிலநிவாரண மருந்துகள் தற்போது போலியாக தயாரிக்கப்படுவதாக டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு டெல்லியின் இப்ராஹிம்பூர் பகுதியில் போலி ENO தயாரித்த பெரிய தொழிற்சாலை ஒன்றை குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து சுமார் 91,000 போலி ENO பாக்கெட்டுகள், 80 கிலோ மூலப்பொருள், 54,780 ஸ்டிக்கர்கள், 13 கிலோ லோகோ ரோல்கள், 2,100 வெற்று பாக்கெட்டுகள் மற்றும் ஒரு பேக்கிங் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் சந்தீப் ஜெயின் மற்றும் ஜிதேந்திரா என்ற இருவரை கைது செய்துள்ளனர்.

eno

போலி ENO-வில் மலிவான மற்றும் தரக்குறைவான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அவை சரியாகக் கரையாமல் வயிற்று எரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், வாந்தி, அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உண்மையான ENO என்பது சோடியம் பைகார்பனேட், சிட்ரிக் அமிலம் மற்றும் சோடியம் கார்பனேட் ஆகியவற்றின் சரியான கலவையாகும். ஆனால் போலி தயாரிப்புகளில் இச்சூத்திரம் பின்பற்றப்படவில்லை.

eno

உண்மையான ENO வாங்குவது எப்படி என்பதை நுகர்வோர் கவனிக்க வேண்டும். அசல் பேக்கேஜிங் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்கும்; போலி பாக்கெட்டுகள் மங்கலான அச்சுடன், குறைந்த அளவில், தவறான லோகோவுடன் இருக்கும். உற்பத்தியாளர் பெயர், முகவரி, தொகுதி எண் மற்றும் MRP சரியாக இல்லையெனில் அது போலியாக இருக்கலாம். 5 கிராம் ENO-வின் உண்மையான விலை ரூ.10; இதை விடக் குறைவாக விற்பனை செய்தால் அவ்வாறு விற்கும் பொருள் போலியானதாக இருக்க வாய்ப்பு அதிகம். மருத்துவர்கள் எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது — “ஒரு சிறிய அலட்சியமும் உங்கள் ஆரோக்கியத்துக்கு பெரிய ஆபத்தாக மாறலாம்.”

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!