மகாபாரத கர்ணனாக நடித்த பிரபல நடிகர் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
பங்கஜ்
 

 

இந்தி திரையுலகின் பிரபல நடிகர் பங்கஜ் தீர் இன்று (அக்.15) மும்பையில் காலமானார். நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 79 வயதான அவரது மறைவு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரது புகைப்படங்களையும் உரையாடல்களையும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் பி.ஆர். சோப்ரா இயக்கிய ‘மகாபாரதம்’ தொடரில் கர்ணனாக நடித்ததன் மூலம் பங்கஜ் தீர் தொலைக்காட்சியில் தனித்தன்மை பெற்றார். சந்திரகாந்தா, யுக், தி கிரேட் மராத்தா, பஹு பேகம் போன்ற தொடர்களிலும், ஆஷிக் ஆவாரா, சதக், சோல்ஜர், பாட்ஷா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பு பல தலைமுறை பார்வையாளர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றது.

அவரது நண்பரும் ‘மகாபாரதம்’ தொடரில் அர்ஜுனனாக நடித்த ஃபிரோஸ் கான் சமூக ஊடகங்களில் “குட்பை என் நண்பரே, நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்வோம்” என்று பதிவிட்டார். பங்கஜ் தீரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு மும்பை வைல் பார்லே பகுதியில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?