படப்பிடிப்பில் மாரடைப்பு... பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!
கன்னடத் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகர் ராஜு தாளிக்கோடு காலமானார். கடந்த இருதினங்களுக்கு முன்பு இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 49.

திரையுலகில் பல பிரபல கன்னட நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்த ராஜு தாளிக்கோடு, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் பிரபலமானவர். எளிமையான நகைச்சுவை நடிப்பு மற்றும் இயல்பான உரையாடல் திறமையால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.அவரது திடீர் மறைவால் கன்னடத் திரையுலகம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
