தனக்கு தெரியாமல் சொத்தை விற்க முயன்ற தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!

 
கொலை

கிழக்கு டெல்லியின் அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மெக்கானிக் கவுதம் தாக்கூர். இவரது இளைய மகன் மகேஷ் தாக்கூர். கவுதம் தாக்கூர் தனது சொத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டு அசோக் நகரில் தனது மூத்த மகனுக்காக புதிய வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக இளைய மகன் மகேஷ் தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது மூத்த மகனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வரும் வீட்டை விற்க கவுதம் தாக்கூர் முயன்றுள்ளார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

மகேஷுக்குத் தெரியாமல் தந்தையும் மூத்த மகனும் வீட்டை விற்க ரகசியமாக திட்டமிட்டுள்ளனர். இதையறிந்த மகேஷ், தன் தந்தை தன்னை ஏமாற்றுகிறார் என்று வருந்தியுள்ளார். மேலும், தனக்கு துரோகம் செய்த தந்தையை கொல்ல மகேஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி, இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கத்தியால் குத்தி மகேஷ் கொன்றார். பின்னர், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பக்கத்து வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசினார்.

கொலை

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷிடம் விசாரணை நடத்தியதில் மகேஷ் தனது தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மகேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!