7 வருடங்களுக்குப் பின் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி... உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
பட்டாசு
 

டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்திருந்த பட்டாசு வெடிப்பு தடை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் நீக்கப்பட்டது.2018-ம் ஆண்டு முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடும் காற்று மாசு நிலவியதால், பட்டாசு வெடிக்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதே தடை அமல்படுத்தப்பட்டது.

பட்டாசு கடை

இந்தத் தடையை தளர்த்தக் கோரி, மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரிக்கப்பட்டன.

பட்டாசு

விசாரணையில், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி மக்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.இந்த தீர்ப்பால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். வரவிருக்கும் தீபாவளியில் தலைநகரம் முழுவதும் மீண்டும் ஒளி, சத்தம் கலந்த கொண்டாட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?