கென்யா முன்னாள் பிரதமர் இந்தியாவில் காலமானார்!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80) இன்று காலை கேரளாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2008 முதல் 2013 வரை கென்யா பிரதமராக பணியாற்றிய அவர், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஆயுர்வேத சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்த ரைலா ஒடிங்காவை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

ரைலா ஒடிங்காவின் மரணம் கென்யா அரசியல் வட்டாரத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் விரைவில் கென்யாவுக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
