அடுத்த அதிர்ச்சி... சபரிமலையைத் தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலில் 31½ சவரன் தங்கம் மாயம்!
கேரளாவில் சபரிமலையைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் 31½ சவரன் மாயமாகி இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையைப் போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்புப் பிரோக்களில் பாதுகாக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 2020-21 தணிக்கை அறிக்கையில் 2,992.070 கிராம் தங்கம் இருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் பதிவேட்டில் 3,247.900 கிராம் தங்கம் காணப்பட்டதால், 255 கிராம் (31½ பவுன்) தங்கம் மாயமாகி இருப்பது தெரிந்துள்ளது.இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
