இன்று முதல் மிக கனமழை எச்சரிக்கை... மேற்குவங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
இன்று முதல் மேற்கு வங்க மாநிலத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மமதா பானர்ஜி அனுப்பியுள்ள அறிவுறுத்தல் செய்தியில், “இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைத்துத்துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் பலியாகினர். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடமிருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
