கள்ளக்காதல் விபரீதம்... 11 மாத குழந்தையை கொன்ற 'கொடூர' தாய்!

 
ஷில்பா

காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இன்னொருவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், அதற்கு இடையூறாக இருந்த காதலனுடனான உறவில் பிறந்த 11 மாத குழந்தையைக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண். அதன் பிறகு, குழந்தை இறந்து விட்டதாக காதலனுக்கு போன் செய்து நாடகமாடியது அம்பலமானது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அஜ்மல். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு 11 மாதத்தில் ஷிகன்யா என்ற பெண் குழந்தை இருந்தது. இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், இருவரும் சில மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அஜ்மலை தொடர்பு கொண்ட ஷில்பா, குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

ஆனால் இதனை நம்ப மறுத்த அஜ்மல், குழந்தையுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஷில்பாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷில்பா கார் ஒன்றில் அஜ்மல் நடத்தி வரும் தேநீர் கடைக்கு வந்துள்ளார். அப்போது காரில் இருந்து மர்ம நபர் ஒருவர் இறங்கி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அஜ்மல், காரின் பின்பக்கம் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை பார்த்த போது, குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அஜ்மல் இது தொடர்பாக ஷொரனூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். போலீஸார் குழந்தையுடன் தம்பதிகளை அரசு மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற போது குழந்தை இறந்து நீண்ட நேரம் ஆகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் மூலம் வெளிவந்த உண்மைகள்

இருப்பினும் குழந்தையின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லாததால், ஷில்பாவை போலீஸார் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷில்பாவை போலீஸார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது பணிக்கு இடையூறாக இருந்து வந்ததால், குழந்தையை கொலை செய்ததாக ஷில்பா ஒப்புக்கொண்டு உள்ளார். இதனிடையே இந்த சம்பவத்தில் காரில் இருந்து தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜ்மல் உடனான கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவருடன் காதலில் இருந்து வந்த ஷில்பா, அதற்கு இடையூராக இருந்ததால் குழந்தையை கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஷில்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் அவர் அஜ்மலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், அஜ்மலுக்கு குழந்தை இறந்து விட்டது குறித்து தகவல்களை அனுப்பி இருந்தது தெரிய வந்ததால் அது தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web