நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாரடைப்பில் உயிரிழப்பு!

 
மும்பை
 

 

மும்பை எஸ்பிளனேட் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துயரச் சம்பவம் வழக்கறிஞர் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 59 வயதான மூத்த வழக்கறிஞர் மாழ்தி பவார், நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர்கள் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென நெஞ்சுவலியை உணர்ந்தார். அவர் உடனே தனது கணவர் ரமேஷ் பவாரிடம் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்த நிலையில், விரைவாக காமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்றதும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மும்பை

இந்தச் சம்பவம் குறித்து மாழ்தி பவாரின் கணவர் ரமேஷ் பவார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “நீதிமன்றத்தில் யாரும் என் மனைவிக்கு சிபிஆர் கொடுக்க முயற்சிக்கவில்லை. அருகிலிருந்த ஜி.டி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் யாரும் முன்வரவில்லை. அதற்கு பதிலாக சிலர் கைபேசியில் வீடியோ எடுக்க மட்டும் முயன்றனர். நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் என் மனைவி இன்று உயிருடன் இருந்திருப்பார்” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

மும்பை

இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகங்களில் அவசர மருத்துவ வசதிகள் இல்லாமையை வெளிச்சமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சுனில் பாண்டே, அனைத்து நீதிமன்றங்களிலும் முதல் உதவி, சிபிஆர் பயிற்சி, அவசர மருத்துவ வசதி ஆகியவற்றை ஏற்படுத்தக் கோரி தலைமை நீதித்துறை நடுவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!