15,000க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள்... 8 வருடங்களில் 256 குற்றவாளிகள் சுட்டுக்கொலை.. உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி!

 
என்கவுன்டர்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000க்கும் அதிகமான என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இதில் 256 குற்றவாளிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மிஷன் சக்தி 5.0 திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் குற்றவாளிகளை அடக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த குற்றவாளி நிக்கி என்ற ஷேஸாத், மீரட்டில் திங்கள்கிழமை (அக்.13) நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

என்கவுன்டர்

இந்த நடவடிக்கைகள் குறித்து உத்தரப் பிரதேச காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2017 முதல் இன்று வரை 15,726 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 256 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்; 10,324 பேர் காயமடைந்தனர். மேலும் 31,960 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்கவுன்டர்

இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் 18 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 1,754 போலீசார் காயமடைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தகைய திடீர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?