“எனது வாக்குச்சாவடி வலிமையானது...” இன்று பீகாரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் பிரதமர் மோடி!

 
மோடி

தமிழகத்தில் வரும் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு  கட்டமாக நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.

மோடி

பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் சேர்ந்த இந்தியா கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சி உள்ளிட்டவை பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.

இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி

இந்நிலையில் பிரதமர்  நரேந்திர மோடி இன்று அக்டோபர் 15ம் தேதி பீகாரில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.அவர் பா.ஜனதா தொண்டர்களுடன் நேரில் கலந்துரையாடி, ‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ திட்டத்தின் கீழ் ஆலோசனைகள் வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?