இன்று நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு துவக்கம்... 2 ஷிப்ட்களாக நடைபெறுகிறது!

 
நீட் நீட்
நாடு  முழுவதும் இன்று ஆகஸ்ட் 11ம் தேதி காலை முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த முதுகலை நீட் தேர்வு இரு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது. இளங்கலை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் முதுநிலை நீட் தேர்வு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ முதுகலை படிப்புகளில் சேர்க்கை பெற, மருத்துவ மாணவர்கள் நீட் முதுகலை தேர்வு எழுதுகின்றனர்.

நீட் நுழைவுத்  தேர்வு

முதுநிலை நீட் தேர்வு குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் MD, MS மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. முன்னதாக நீட் முதுநிலை தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு நடைபெறுவதற்கு 12 மணி நேரம் முன்னதாக திடீரென தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு

இந்நிலையில், இளங்கலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் என பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.முதுநிலை நீட் தேர்வு இன்று ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி முதுநிலை நீட் தேர்வு இன்று 2 ஷிப்டுகளாக நடைபெறுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!