இனி வீட்டில் இருந்தே ஆன்லைனில் மது வாங்கலாம்... களமிறங்கும் நிறுவனங்கள்!
பலசரக்கு, உணவு, மருந்து, உடை, அலங்காரப்பொருட்கள் என அனைத்தையும் ஆன்லைனில் பெறும் வசதி இந்தியா முழுவதும் வந்து விட்டது. ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே பொருட்கள் வீடு தேடிவரும். தற்போது இந்த பட்டியலில் மதுபானங்களும் சேரப்போகின்றன. குறிப்பாக, கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்து பெறலாம்.

புது டெல்லி, கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வீட்டிற்கு டெலிவரி செய்வதற்கான முன்னோடித் திட்டத்தை ஆன்லைன் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் டோர் டெலிவரி முறை அமல்படுத்தப்பட்டால், படிப்படியாக நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பீர், ஒயின், குறைந்த விலை மதுபானங்கள் முதலில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் தின்பண்டங்களை ஆர்டர் செய்வது போலவே, மதுபானங்களையும் ஸ்விக்கி, ஜோமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் ஆர்டர் செய்ய முடியும்.
"நவீன இந்தியாவில் மதுவைப் பற்றிய கருத்து மாறிவிட்டது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் மது அருந்துவது இப்போது அதிகரித்து விட்டது. அத்துடன் மழை, புயல் உள்ளிட்ட எந்த அவசர காலத்திலும் மக்கள் கடைகளுக்குச் சென்று மதுபானம் வாங்க முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் டெலிவரிதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும்" என்று ஆன்லைன் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கின் போது, ஆன்லைன் மூலம் மதுபானம் வழங்கும் முறை சில இடங்களில் செயல்படுத்தப்பட்டது, ஆனால் நாடு முழுவதும் அதை செயல்படுத்த முடியவில்லை. தற்போது, நாட்டில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே மதுபானங்களை ஆன்லைனில் வீட்டுக்கு டெலிவரி செய்யும் வசதி உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வரும் என்பது தெரிகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
