பகீர்... 900 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு... ஸ்கேன் செண்டர்களுக்கு சீல் வைப்பு!

 
அபார்ஷன் கருகலைப்பு குழந்தை

இந்தியாவில் கருகலைப்பு சட்டவிரோத செயலாகும். கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவிப்பதே தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் 900 கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருகலைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஸ்கேன் செண்டர் மையங்களில் அதிரடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஸ்கேன் செண்டர் மையங்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். 

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் , 900 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபார்ஷன் கருகலைப்பு குழந்தை

முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் ஏஜென்டுகள் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில்,கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா, என்பதைக் கண்டறிவது தொடர்பாக கர்ப்பிணிகளைத் தொடர்பு கொள்ளும் சில தனியார் ஏஜென்டுகள், அவர்களிடமிருந்து இந்த பரிசோதனைக்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் சித்தராமையா

இதற்காக மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை ஒன்றில், பரிசோதனைக்கான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு, அங்கு ரகசியமாக கருவின் பாலினத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்துள்ளன.

பரிசோதனை முடிவில் சிசுவின் பாலினம் பெண் என்பது கண்டறியப்பட்டால் உடனடியாக கருக்கலைப்பு மேற்கொள்ள இந்த கும்பல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து கருக்கலைப்பு செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை நடத்தி வரும் நிலையில், சிஐடி விசாரணைக்கு மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web