பிரதமர் மோடி 4 இடங்களில் பிரசாரம்.. பீகாரில் தேர்தல் திருவிழா!
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் முதல் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்.
அவரின் முதலாவது பிரசார கூட்டம் வரும் 24ம் தேதி சமஷ்டிபூரில் நடைபெற உள்ளது. அதே நாளில் பெகுசாரையிலும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். தொடர்ந்து 30ஆம் தேதி முசாபர்பூர் மற்றும் சாப்ரா நகரங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேச்சாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமஷ்டிபூரில் பிரசார நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன், முன்னாள் முதல்வரும் பாரத ரத்னாவுமான கர்பூரி தாக்கூரின் பிறந்த ஊருக்கு சென்று அஞ்சலி செலுத்த பிரதமர் முடிவு செய்துள்ளார்.

மேலும், நவம்பர் மாதம் 2, 3, 6 மற்றும் 7ஆம் தேதிகளிலும் பிரதமர் மோடி தேர்தல் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
