பிரதமர் மோடியின் கார் வாஷ் வீடியோ வைரல் ... பாதுகாப்பு குறைபாடு குறித்த சர்ச்சை தீவிரம்!
பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் வாகனங்கள் பீகாரில் உள்ள ஒரு சாதாரண கார் வாஷ் கடையில் கழுவப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது பாதுகாப்பு விதிகளை மீறிய பெரிய தவறு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Ultimate vishwaguru moment🤣🤣
— Manali Diaries (@LoveFromManali) October 25, 2025
Cars from PM Modi’s official convoy spotted being washed at a local wash point.
Car wash owner from Samastipur made video and posted it on Insta.
Don’t they hv proper infrastructure for washing cars used by PM of India??🙄🤷♂️ pic.twitter.com/p7oKW5MQdt
‘விஸ்வகர்மா மோட்டார் விஜய்’ எனும் கார் வாஷ் கடையின் உரிமையாளரே இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதில் கருப்பு நிற ஹை-எண்ட் எஸ்.யு.வி. கார்கள், பிரதமரின் பாதுகாப்புப் படைகள் (SPG) பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சற்றும் குறையாதவாறு வரிசையாகக் கழுவப்படுவது தெரிந்தது. இதனை பலரும் பிரதமர் பயணிக்கும் வாகனங்களாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இது பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “பிரதமரின் கார் உள்ளூர் கடையில் கழுவப்படுவது நம்ப முடியாத பாதுகாப்பு குறைபாடு” என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்ச்சை தீவிரமானதையடுத்து, அந்த கார் வாஷ் கடையின் இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாகனங்கள் உண்மையில் பிரதமரின் பாதுகாப்புக் குழுவின் கார்களா என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை இல்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
