இந்துக்களின் பாதுகாப்பு.. வங்கதேச பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த பிரதமர் மோடி!
இடஒதுக்கீட்டிற்கு எதிராக வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, வங்கதேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்தபோது, இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும் பேராசிரியருமான முகமது யூனுஸ் இன்று (16.08.2024) பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

வங்காளதேச ஜனநாயகத்திற்குத் தேவையான நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான ஆதரவை இந்தியா வழங்கும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு இடைக்கால அரசு முன்னுரிமை அளிக்கும் என்று முகமது யூனுஸ் பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
