நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை... 2 நாட்கள் டிரோன் தடை !

 
சி.பி.ராதா கிருஷ்ணன் சி.பி.ராதா கிருஷ்ணன்

இந்திய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சி.பி. ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். நாளை காலை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலை நேரத்தில் திருப்பூரை அடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் ரெயில் நிலையம் முன் உள்ள குமரன் சிலைக்கும், மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதன் பின்னர், ஷெரீப் காலனியில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்று தாயாரிடம் ஆசீர்வாதம் பெறவுள்ளார். அவரை வரவேற்க திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ட்ரோன்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் திருப்பூர் மற்றும் காங்கயம் பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!