ரஜினிகாந்த் சகோதரர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி... பெங்களூரு விரைந்த சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூருவில் ஹொசகேரேஹள்ளியில் வசித்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

84 வயதான சத்யநாராயண ராவ் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகியதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் “சத்யநாராயண ராவ் விரைவில் குணமடையட்டும்” என ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
