அதிகாலையில் சோகம்.. கேஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்!

 
சிலிண்டர் வெடி விபத்து

இன்று அதிகாலையில், பெங்களூருவில் வீடு ஒன்றில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் ஐந்து வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பயலஹங்காவில் உள்ள பகதூர் சாஸ்திரி பேரங்காயில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அருகில் அந்த வீட்டின் செங்கற்சுவர் இடிந்து விழுந்தது. ‘

அத்துடன் அருகில் இருந்த மூன்று வீடுகள் உள்பட ஐந்து வீடுகள் சேதமடைந்தன. சிலிண்டர் வெடித்த போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

சிலிண்டர் விபத்து

கட்டிட இடிபாடுகளில் இருந்து பசியா பானு(50), சல்மா(22), ஷாகித்(16), அஸ்மா(50), அப்ரோஸ்(23) உள்பட 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். அத்துடன் அவர்களை மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் வீடுகள் இடிந்த மக்கள், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் யலஹங்கா புதிய நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயமடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web